Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்த எலக்ட்ரீசியனுக்கு நடந்த பரிதாபம்… சோக சம்பவம்…!!!!

மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகில் வெள்ளாளன் கோட்டை பஞ்சாயத்து சூரியமினிக்கன் கிராமத்தில் வசித்து வந்தவர் எலக்ட்ரீசியன் செல்லத்துரை(55). இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், செண்பகராஜ், அருண் ராம் என 2 மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் சூரியமினிக்கன் கிராமத்தில் இருக்கின்ற ஒருவருக்கு சொந்தமான மோட்டார் பம்புசெட் கிணற்றில் மின் ஒயர்கள் பழுதாகி இருந்த நிலையில், அதை சரி செய்வதற்காக செல்லத்துரையை அழைத்துள்ளார்கள்.

இதனையடுத்து செல்லத்துரை அந்த பகுதிக்கு நேற்று காலை 7 மணி சென்றார். அந்த மோட்டார் பம்பு செட்டு கிணறுக்கு மின்சாரம் இணைக்கப்படும் டிரான்ஸ்பார்மர் அந்தக் கிணற்றிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கின்றது. அங்கு சென்று செல்லத்துரை டிரான்ஸ்பார்மர் ஆப் செய்தார். அதன்பின்னர் பம்புசெட்டு கிணற்றுக்கு வந்து மின்கம்பத்தில் ஏறி செல்லத்துரை வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு விவசாயி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

அப்போது அவர் பம்பு செட்டை இயக்கும் போது மின்சாரம் இல்லை என்பதை பார்த்து டிரான்ஸ்பார்ம் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். உடனே அந்த விவசாயி டிரான்ஸ்பார்மரை இயக்கினார். ஆனால் அவர் அரை கிலோ மீட்டர் தூரத்தில் மின்கம்பத்தில் ஏறி உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்த செல்லதுரை அந்த விவசாயி பார்க்கவில்லை. இதனால் மின் கம்பத்தில் வேலை செய்துகொண்டிருந்த செல்லத்துரை மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் உடல் தொங்கியபடி பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், பால் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்லத்துரையின் உடலை மின் கம்பத்திலிருந்து இறக்கி பின் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். செல்லத்துரையின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |