தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக துறைவாரியான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் அதில் புதிய அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். அதன்படி விரைவில் 3000 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார். காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயம் கடைபிடிக்கப்படும்.
திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு ஆளிநர்களுக்கு 5% சிறப்பு ஊதியம் அளிக்கப்படும். காவலர்களுக்கான நலம் மேம்பாட்டிற்காக மகிழ்ச்சி என்ற செயல் திட்டம் 53 லட்சத்தில் செயல்படுத்தப்படும். போதைப்பொருள் மதுவிலக்கு பிரிவு உருவாக்கப்படும். தமிழகத்தில் வன்முறை, ஜாதிச் சண்டை, மத மோதல்,அராஜகம் மற்றும் துப்பாக்கிச் சூடு இல்லாத கூலிப்படை இல்லாத அளவிற்கு அதை துடைத்து எறியுங்கள் என்று என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் 78 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.