Categories
சினிமா தமிழ் சினிமா

படவிழாவில் கண் கலங்கிய அருண்ராஜா…. மேடையில் நிகழ்ந்த சோகம்….!!!

அருண்ராஜா காமராஜ் மேடையிலேயே கண் கலங்கியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்குனராக கனா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

வாழ்க்கைல அவ்வளவு கனவுகளோடு இருந்த பொண்ணு சிந்துஜா!" - தோழி ரதி ராதிகா |  radhi radhika shares memories of her friend sindhuja arunraja kamaraj

இதனையடுத்து, இவர் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜரின் மனைவி குறித்து பேசினார். அப்போது அருண்ராஜா காமராஜ் மேடையிலேயே கண் கலங்கினார். இவர் படவிழாவில் கண்கலங்கியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |