Categories
உலக செய்திகள்

இது அப்பட்டமான பொய்…. வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடித்த ராஜபக்சே…? வெளியான பரபரப்பு தகவல்…!!!!!!

இலங்கையிலிருந்து மகிந்த ராஜபக்சே வெளியேற திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள்  வெளியாகியிருக்கிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்திருக்கிறது. பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக மகிந்தராஜ பக்சே  அறிவித்திருந்த  சிலமணி நேரங்களில் ராஜபக்சே  ஆதரவாளர்களுக்கும், அரசுக்கும் எதிராக போராடுபவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் ராஜபக்சே  ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பல பேர் காயமடைந்து இருக்கின்றனர்.

இதனால் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இருப்பினும் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் பொலன்னருவாவை சேர்ந்த ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா,  போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்  அவரது பாதுகாவலரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகின்றது. இந்த நிலைமையில் அவர்கள் இருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு போன்ற பல இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 150க்கும் அதிகமானோர்  காயமடைந்து இருக்கின்றனர். அவர்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை சம்பவம் காரணமாக  நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. மேலும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகமாக வெளிப்பட்டு  வருகிறது.

அந்த வகையில் அருகில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சேவின் பரம்பரை வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து இருக்கின்றனர். இதில் மொத்த வீடும் எரிந்து தீயில் நாசமாகியுள்ளது. இதனைப் போல ஆளும் கட்சியை சேர்ந்த பல எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் வீடுகளும் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது. இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக  காணப்படும் சூழ்நிலையில் பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறி இருக்கின்றார்.

மேலும் பலத்த பாதுகாப்புகளுடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு வெளியேறி ராஜபக்சே வேறு ஒரு இல்லத்தில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் இலங்கையிலிருந்து ராஜபக்சே வெளியேற  திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Categories

Tech |