Categories
மாநில செய்திகள்

தக்காளி காய்ச்சல்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!!!!

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பரவிய கொரோனா எனும் கொடிய வைரஸ் இன்னும் மக்களை ஆட்டி படைக்கும் சூழ்நிலையில், கேரளாவில் புதிய வைரஸ் பரவத் தொடங்கி இருக்கிறது. தக்காளி வைரஸ் எனப்படும் அந்த வைரஸால் இதுவரையிலும் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிகம் பாதிப்பது முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படும். இந்த வைரஸின் தாக்கம் கொல்லம் மாவட்டத்தில் அதிகம் இருக்கிறது.

இதன் காரணமாக அந்த மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சலானது தமிழகத்திற்கு பரவும் அபாயமும் இருக்கிறது. இதனை யொட்டி தமிழக -கேரளா எல்லையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். மாநில எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக களஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை உட்பட 13 சோதனைச்சாவடிகளிலும் இந்த கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. வாளையாறு வழியே கோவை வரும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் வாயிலாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று கோவை மாவட்ட எல்லையில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |