ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படி மார்ச் 29-ஆம் தேதி தொடங்குமென பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் 2020 ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஐ.பி.எ.ல் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி, திட்டமிட்டப்படி வருகின்ற மே 24-ஆம் தேதி ஐ.பி.எல் இறுதி போட்டி நடைபெறும் என்றார். மேலும் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் என்பது 5 நாட்கள் மட்டுமே இந்த முறை நடைபெறும் என்றும் கூறினார்.
அதன்படி ஐ.பி.எல் போட்டி வரும் மார்ச் 29-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. அதனை தொடர்ந்து மே 12-ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் தகுதிசுற்று போட்டி : மே 14-ஆம் தேதி (கொல்கத்தா)
வெளியேற்றுதல் சுற்று போட்டி : மே 15-ஆம் தேதி (பெங்களூர்)
இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி : மே-16-ஆம் தேதி (சென்னை)
இறுதிப்போட்டி : மே 24 ஆம்-தேதி (மும்பை )