Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு பயந்து…. பிளஸ் 1 மாணவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தேர்வுக்குப் பயந்து பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள களம்பூர் தந்தை பெரியார் நகர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவன் களம்பூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். இன்று பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதனால்விக்னேஷை அவரது தாயார் படிக்க சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அவரது சகோதரி நிவேதிதா கல்லூரிக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாகயிருந்த விக்னேஷ் தேர்வுக்குப் பயந்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து கல்லூரி முடிந்து நிவேதிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது தம்பி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து நிவேதிதா விக்னேஷை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு விக்னேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |