தெற்கு ரயில்வே சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திருச்சி ரயில்வே கோட்டம் விருதுகளை தட்டிச் சென்றது.
இந்தியா முழுவதும் 67-வது ரயில்வே வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வேயில் சிறப்புற பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இது ஐ.சி.எப்பில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடந்ததையடுத்து விழாவிற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் பிஜி மால்யா தலைமை தாங்கினார். இதையடுத்து தெற்கு ரயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய நாற்பத்தொரு உயர் அதிகாரிகள் மற்றும் 157 ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கேடயங்களை வழங்கினார்.
மேலும் தெற்கு ரயில்வேயில் இருக்கும் பணிமனை, கோட்டங்கள் பிரிவுகளுக்கு கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்வில் மொத்தமாக முப்பத்தி ஏழு கேடயங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியாளர் சேவை, மருத்துவ சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியதற்கு திருச்சி ரயில்வே கோட்டம் விருதுகளை பெற்றது. மேலும் ஒட்டுமொத்த விருதுகளையும் திருச்சி கோட்டம் வென்றது. இந்த கேடயத்தை திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் பெற்றுக்கொண்டார்.