2022-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒவ்வொரு வருடமும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ எஃப் எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப் படுகின்றது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் upsc.gov.in, upconline.nic.inஎன்ற இணைய தளங்களில் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு ஜூன் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டில் மட்டுமே 861 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.