சீன நாட்டில் உள்ள குலாங் கன்யான் என்ற இடத்தில் புத்தர் கை அமைந்துள்ளது. இந்த கை புத்த கடவுளை சிறப்பிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் கை ஒரு சுற்றுலாத் தலமாக இருப்பதால் அனைவரும் அந்த இடத்திற்கு செல்லலாம். அந்த இடத்திற்கு செல்ல வேண்டுமானால் இந்திய மதிப்புப்படி ஒரு நபருக்கு 19,000 ரூபாய் கொடுக்க வேண்டும். அந்த இடத்தில் ஒரு கண்ணாடிப் பாலமும் அமைந்துள்ளது.
இதனால் புத்தர் கை இருக்கும் இடத்திற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். மேலும் புத்தர் கையின் மீது ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏறுவார்கள். இந்த கையின் அடியில் பாதுகாப்பிற்காக ஒரு வலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் தைரியமாக புத்தர் கையின் மீது ஏறுகின்றனர்.