தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இரவு பணிக்கு செல்லும் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் 15 நாட்களுக்கு ஒருமுறை சப் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு,காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை 30 லட்சம் ரூபாயிலிருந்து 60 லட்சம் ரூபாயாக உயர்வு உள்ளிட்ட 81 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காவல் துறையினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories