ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து விளக்கங்களையும் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்தார்.