Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… “சாலை அமைய தடுப்புக் கம்பியில் மோதி விபத்து”… 2 பேர் உயிரிழப்பு…!!!!

மணப்பாறை அருகே சாலை விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பலியாகிய நிலையில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் காமராஜ், கார்த்திக், செஞ்சி வானகரத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை, கவியரசு, சுரேஷ் ஆவடியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக முடிவெடுத்து கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பும் பொழுது இவர்களின் கார் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரும்பொழுது மணப்பாறை அடுத்துள்ள ஆசாத்ரோடு என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பலியானார். மேலும் ஏழுமலை, சுரேஷ், காமராஜர் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தார்கள். மற்றவர்கள் லேசான காயம் அடைந்த நிலையில் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே ஏழுமலை என்பவர் பரிதாபமாக மரணமடைந்தார். பின் சுரேஷ் காமராஜ் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |