இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தை உடனே கூட்டுவதற்கு சபாநாயகரிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தது, கொழும்பு நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இந்நிலையில், மக்கள் கடுமையாக கொந்தளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே, சபாநாயகரிடம் உத்தரவிட்டிருக்கிறார்.