நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கணக்கு தொடங்குவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த வங்கிக் கணக்கு தொடங்கலாம். இந்த இந்த வங்கி கணக்கு தொடங்குவதற்கு முதலில் ஏதாவது ஒரு வங்கிக் கிளையில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதில் ஏடிஎம் கார்டு, காசோலை புத்தகம், ஆன்லைன் பரிவர்த்தனை வைப்பது ஆகியவற்றை தேர்வு செய்து பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பின்னர் இந்த விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று நகல்கள் இணைத்து கொடுக்கவேண்டும்.
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள சான்று கொடுக்கவும். குடும்ப அட்டை , கேஸ் பில் ஆகியவற்றில் ஒன்றை இருப்பிட சான்றாக கொடுக்க வேண்டும். மேலும் ஜன்தன் வங்கி கணக்கில் உங்களுடைய ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கூட நீங்கள் 5 ஆயிரம் வரையில் ஓவர் டிராப்ட் முறையில் பணத்தை எடுக்க முடியும். இதற்கு நீங்கள் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை maintain செய்ய வேண்டும்.