இசைஞானி இளையராஜா வருடந்தோறும் தன்னுடைய பிறந்தநாளை ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடுகிறார். இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்த வருடம் கோவையில் இன்னிசை கச்சேரி நடத்த இளையராஜா திட்டமிட்டுள்ளார். இதற்கான ஒத்திகைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த கச்சேரியில் இதுவரை வெளிவராத பல பாடல்களை இசை அமைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கங்கைஅமரன் செய்து வருகிறார். எனவே இந்த இசைக் கச்சேரியில் விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.