Categories
தேசிய செய்திகள்

ALERT: உங்ககிட்ட போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் இருக்கா…. இது உங்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பல்வேறு உள்ளன. இந்தத் திட்டங்கள் சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயன்பெறும் வகையில் உள்ளது. அதனால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேர்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகள் சேமிப்பு திட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் பெரியவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமகன் திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகியவை உள்ளன. இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சிறந்த வட்டியும் வரி சலுகையும் வழங்கப்படுகிறது. அதற்கான வட்டியை ஒவ்வொரு திட்டத்தைப் பொறுத்து மாறுபடும். இதனிடையே சில மாதங்களாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன.இது தொடர்பாக அஞ்சல் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏனென்றால் இந்திய அஞ்சல் துறை சில திட்டங்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றது. வினாடி-வினா போட்டிகளை நடத்தி வருகிறது.அதில் வெற்றி பெறுபவர்களுக்கு மானியத்தொகை வழங்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை வாடிக்கையாளர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அஞ்சல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற பரிசுகள் மற்றும் மானிய தொகை போன்றவற்றை அஞ்சல்துறை எப்போதும் வழங்குவதில்லை. உங்களுக்கு தெரியாத நபர்களிடம் பிறந்த தேதி, அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட், ஓடிபி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் விவரங்களை யாரும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |