Categories
உலக செய்திகள்

“இலங்கையில் குடியேறிய கொரோனோ”… சீனர்களுக்கு விசா ரத்து..!!

இந்த நிலையில், அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக, சீன பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா (விசா-ஆன்-அரைவல்) வழங்குவதை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இலங்கைக்கு  40 வயது சீனப் பெண் ஒருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி 25-ஆம் தேதி இலங்கை விமான நிலையத்திலிருந்து அப்பெண் வெளியேறும் போது கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
Image result for The Sri Lankan government has canceled the visa for Chinese travelers on arrival after a person infected with the coronavirus in Sri Lanka.
பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என  இலங்கை சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுடாத் சுரவீரா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து, சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் கொள்கையை ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |