Categories
உலக செய்திகள்

பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவது கட்டாயம்…. தலிபான்களின் உத்தரவைக் கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கான் பெண்கள்….!!

தலிபான்களின் புதிய உத்தரவை கண்டித்து ஆப்கானில் பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆப்கான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் தங்களின் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை அணிய வேண்டும் என்று தலிபான்கள் அரசு உத்தரவிட்டது. இதனை கண்டிக்கும் விதமாக காபூலில் உள்ள பெண்கள் கண்டன பேரணி போராட்டம் நடத்தியுள்ளனர்.

குறிப்பாக  கடந்த முறை எங்கள் ஆட்சியில் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை போல் நடக்காது என தலிபான்கள் அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால் இப்போது பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாக பயணிக்க கூடாது என்றும் ஆண்களும் பெண்களும் ஒரே சமயத்தில் பூங்கா செல்லக்கூடாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் தொடர்ந்து விதித்து வருவது ஆப்கான் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |