Categories
உலக செய்திகள்

ராஜபக்சே இந்தியாவில் தஞ்சமடைந்தாரா….? இந்திய தூதரகம் விளக்கம்….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் இலங்கையில் தலைமறைவாக உள்ள மகிந்த ராஜபக்சே அங்கிருந்து தப்பித்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து யாரையும் தாம் நாடு கடத்தவில்லை என இலங்கை விமான போக்குவரத்துத் துறை இயக்குனர் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |