நடிகை மும்தாஜ் டி.ஆர். ராஜேந்திரர் இயக்கத்தில் வெளிவந்த மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பின் குஷி, சாக்லெட் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடயிருப்பில் தன்னுடைய சகோதரர் குடும்பத்தோடு சேர்ந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர் மும்தாஜ் தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னுடைய குடும்பத்தினருடன் அனுப்பி வைக்குமாறும் உதவி கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் மும்தாஜ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். புகார் அளித்த அந்த இளம் பெண் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள மற்றொரு வீட்டு வேலை கேட்டதால் மும்தாஜ் வீட்டில் இருந்தவர்கள் அந்த பெண்ணை தேடி சென்று மிரட்ட ஆரம்பித்ததால் பயந்துபோன அவர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த பெண் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவர். அவருக்கு வயது 19 என்பதும், அவருடைய 17 வயதான இளைய சகோதரியும் மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மும்தாஜ் மீது துன்புறுத்துவதாக அளித்த புகாரின் அடிப்படையில் வீட்டு பணிப் பெண்களாக இருந்த இந்த இரண்டு பரையும் மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து இதுகுறித்து மும்தாஜ் வீட்டுப் பணிப் பெண்களாக இருந்த சிறுமி, மற்றும் அந்த பெண் துன்புறுத்தப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.