Categories
பல்சுவை

தாயுடன் சண்டை போட்ட சிறுவன்…. விமானத்தில் ஏறி சென்ற சம்பவம்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்…!!!

சிறுவர்கள் பொதுவாக பெற்றோரிடம் சண்டை போட்டால் கோபத்தில் அவர்களிடம் பேசாமல் இருப்பார்கள். இல்லையெனில் பக்கத்து வீட்டிற்கு சென்று விடுவார்கள். ஆனால் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது சிறுவன் தன்னுடைய தாயுடன் சூப்பர் மார்க்கெட் சென்றுள்ளார். ஆனால் திடீரென சிறுவனை அவருடைய ஏதோ சொல்ல கோபத்தில் சிறுவன் பக்கத்தில் இருந்த விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு ரோம் நாட்டிற்க்கு செல்லும் ஒரு விமானத்தில் ஏறியுள்ளார். அதன் பிறகு தான் சிறுவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவருக்கு சிறுவன் தனியாக வந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து விமானம் ரோமிற்கு சென்ற பிறகு விமான நிலையத்தில் சிறுவன் தனியாக வந்தது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் விமானம் மான்செஸ்டர் செல்லும்போது சிறுவனை விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். அந்த விமானம் மான்செஸ்டர் சென்ற  போது விமான நிலையத்தில் சிறுவனின் தாயார் நின்றுள்ளார். இதை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் சிறுவன் தன்னுடைய தாயை கட்டி அணைத்துக் கொள்கிறார். இது குறித்து நடத்திய விசாரணையில் விமான நிலையத்தில் பணி புரிபவர்களின் கவனக்குறைவால் தான் சிறுவன் தனியாக விமானத்தில் ஏறி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து விமான நிலையத்தில் பணிபுரிந்த 5 பேரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.

Categories

Tech |