Categories
உலக செய்திகள்

மால்டோவாவில் தஞ்சம் புகுந்த உக்ரைன் அகதிகள்… நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஐநா பொதுச்செயலாளர்…!!!

ரஷ்ய தாக்குதலால் உக்ரைன் மக்கள் பக்கத்து நாடான மால்டோவாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் பக்கத்து நாடான மால்டோவாவிற்கு ஐநா சபை பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரஸ் இரண்டு நாட்கள் பயணமாக சென்றுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களை ஐநா பொதுச்செயலாளர் சந்தித்து பேசியிருக்கிறார்.

அவர்கள் இருக்கும் குடியிருப்புகளுக்கு சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அகதிகள் அதிகமாக குடியேறியதால் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர் கொள்வதற்காக மால்டோவாவிற்கு கூடுதலான ஆதரவை ஐநா வழங்கும் என்று அந்நாட்டு அதிபரிடம் உறுதி கூறியிருக்கிறார்.

ஐரோப்பாவில் இருக்கும் மால்டோவா ஏழ்மையான நாடாகும். தற்போது வரை அங்கு 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |