Categories
சினிமா

ரசிகர்களை காண்டாக்கிய நடிகை ஆலியாபட்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

நடிகை ஆலியாபட் அண்மையில் வெளியாகிய கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திலும் அவருக்கு சீதா வேடம் கொடுக்கப்பட்ட காரணத்தால் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்று இருந்தார். இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்து இருந்தார். அந்த விளம்பரத்தில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசில ரசிகர்கள் வீடியோக்களை பகிர்ந்து உள்ளனர். அந்த வீடியோவில் ஆலியாபட் நடித்த கலங்க் என்ற திரைப்பட நிகழ்ச்சியில் அவர் நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியம் அற்றது என குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பகிர்ந்து வரக்கூடிய ரசிகர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Categories

Tech |