உணவு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் நாட்டில் ஒடேசா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முக்கிய துறைமுகங்களை ரஷ்ய ராணுவ படைகள் கைப்பற்றி உள்ளதால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு நெருக்கடியை தவிர்க்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது ” இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக ஒடேசா துறைமுகத்தின் ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
இது உக்ரைனில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதில் உலக நாடுகள் தலையிட்டு ரஷ்யா தடுப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் சுமார் 25 மில்லியன் டன் தானியம் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதாகவும் ஐநா உணவு பிரிவு தெரிவித்துள்ளது.