யுபிஐ பண பரிமாற்றம் என்பது பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் செல்போன் மூலமாக ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்றுவதற்கு யுபிஐ அனுமதி வழங்குகிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமல்லாமல் ஆப்பின் மூலமாக இதில் பணத்தை செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24 மணிநேரம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இதனை இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் வழிநடத்துகிறது. இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துகிறது.
இந்நிலையில் யுபிஐ பணப்பரிவர்த்தனை செயல்களான கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆகியவை முன்னணி இடங்களில் உள்ளன . இந்த செயலில் உள்ள பிரச்சனைகள், பரிசோதனைகளின் போது ஏற்படும் குளறுபடிகள் குறித்து இனி வாட்ஸ் அப் மூலமாக புகார் அளிக்கலாம். +91 8928913333 என்ற எண்ணில் உங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.