விமான நிலைய பாதுகாப்பு பணியில் சேர்க்கப்பட்ட இரண்டு பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய் குட்டிகளுக்கு வீரா, பைரவா என பெயர் சூட்டப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற்படை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள். இந்த மத்திய தொழிற் படையினரின் உடமைகள், வாகன சோதனைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு மத்திய தொழிற்படை காவல்துறையினர் 2 நாய்க்குட்டிகளை சேர்த்தனர். இந்த மோப்ப நாய் குட்டிகள் பிறந்து 86 தினங்கள் ஆகின்றன. இந்த மோப்ப நாய் குட்டிகள் பெல்ஜிய மாலினோயிஸ் வகையை சேர்ந்தவை. மேலும் இந்த நாய் குட்டிகள் மோப்ப சோதனைக்காக ஆறுமாதம் பெங்களூரில் உள்ள பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியில் இந்த நாய் குட்டிகளுக்கு வெடிபொருட்களை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி ஸ்ரீராம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தென்மண்டல விமான நிலைய ஆணையக இயக்குனர் மாதவன் முன்னிலை வைத்துள்ளார். இந்த இரண்டு நாய்க்குட்டிகளுக்கும் வீரா, பைரவா என இந்திய விமான நிலைய ஆணையக விஜிலென்ஸ் தலைமை அதிகாரி அமல் கார்க், சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் பெயரைச் சூட்டி ஆடைகளை அணிந்தனர். மேலும் நாய்க்குட்டிகளுக்கு மாலை போட்டு பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.