Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் சிக்கல்…. நிறுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை…!!!

இலங்கையில் பெட்ரோல் டீசல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் கொந்தளித்து தீவிரமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், மக்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகிவிட்டார். இதனைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரதமர் மகிந்த  ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டதால் கலவரம் ஏற்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சே உட்பட ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள் 35 பேரின் குடியிருப்புகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் 8 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதோடு பேருந்துகளுக்கும் நெருப்பு வைத்து எரிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். எனவே, அங்கு பதற்ற நிலை நிலவுகிறது. இதற்கு மத்தியில் நாட்டில் பெட்ரோல் டீசல் விற்பனை, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |