தமிழ்சங்க அண்ணா நூலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது.
சேலம் அண்ணா பூங்கா அருகே தமிழ்சங்க அண்ணா நூலக வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் அவசர கால மருத்துவ உதவியாளர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி அல்லது அறிவியலை முதன்மை பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு 19 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர முடியும். மேலும் ஒட்டுநர் பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.