மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கணித்து பேசியுள்ளார்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் வெளவ்வால் மூலம் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியோர் உள்பட பலர் இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். நாளுக்குநாள் இந்த வைரஸின் தாக்கத்தினால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 106-ஆக உயர்ந்துள்ளது. தற்போது சீனா முழுவதும் 1,300 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு மிகவும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலக பணக்காரர்களுள் ஒருவருமான பில் கேட்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பாகவே கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து பேசியுள்ளார். பில் கேட்ஸ் கடந்த ஆண்டு மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இந்த உலகம் முழுவதும் விரைவாக பரவுகின்ற சூப்பர் வைரசால் பாதிக்கப்படவுள்ளது. இந்த வைரசின் தாக்கத்தினால் முதல் 6 மாதத்தில் 3.30 கோடி பேர் இறக்க கூடும் என்றார்.
மேலும் அந்த வைரசால் உலகப் போர் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ஆகவே அந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் காப்பாற்றி கொள்வதற்கு எப்போதும் தயாராக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.