இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இலங்கை முன்னாள் அமைச்சர் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கை காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.