தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சிலரின் படங்கள் எப்போதும் ஹிட்டாகும். அப்படி ஹிட் ஆகும் படத்திற்கு பிறகு நடிகர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவில் தற்போதைக்கு 3 நடிகர்கள் மிக அதிக சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த மூன்று பேர் இவர்கள்தான். முதலில் ரஜினிகாந்த், இரண்டாவதாக விஜய், மூன்றாவதாக அஜித். இவர்களுள் ரஜினிகாந்த் அதிகபட்சமாக 120 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் விஜய் 110 கோடியும், நடிகர் அஜித் 100 கோடியும் சம்பளம் வாங்குவதாக சொல்கிறார்கள். இந்நிலையில் கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக இன்றுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருவது ஆச்சரியம் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.
Categories