தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் வசித்து வருகிற ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா என்பவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் இந்த பேனாவின் எடை 37.23 கிலோ மற்றும் 5.5 மீட்டர் நீளம் கொண்டது.
இந்நிலையில் இதற்கு முன் 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த மிக பெரிய பேனாவின் சாதனையை, இந்த பேனாவானது முறியடித்துள்ளது என கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து விதிமுறைகளின்படி இந்த பேனாவின் முனையில் இருந்து, எழுதும்போது மை வெளியே வருகிறது என்கின்ற அதனுடைய செயல்பாடு பற்றியும் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபற்றி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளதாகவும் மற்றும் 265-க்கும் கூடுதலானோர் விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் அதிலும் ஒருவர், வாளை விட பேனா வலிமை வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.