Categories
பல்சுவை

கண்ணாடி பாத்திரம் சுத்தம் செய்ய கஷ்டமா….? அந்த கவலையே வேண்டாம்…. இதை டிரை பண்ணுங்க….!!!!

வீட்டில் சமையலறையில் இருக்கும் கண்ணாடி பாட்டில்களில் சீரகம், மஞ்சள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை போட்டு வைப்பது வழக்கம். இந்த கண்ணாடி பொருட்கள் தூசி அடைந்து விட்டால் அதை சுத்தம் செய்வது அவ்வளவு எளிது அல்ல. ஏனெனில் கண்ணாடி பொருட்கள் கைதவறி கீழே விழுந்துவிட்டால் உடைய வாய்ப்புள்ளது அல்லது அதை சுத்தம் செய்யும்போது கை தடம் பதிய வாய்ப்பு இருக்கிறது. சில சமயம் துடைக்கும் போது திட்டு திட்டாக தெரியும். இந்தநிலையில் கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி குவளைகள், கண்ணாடி ஆகியவற்றை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

கண்ணாடி பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது சோப்பு, ஒரு சில சொட்டு வினிகர் மற்றும் ஒரு கப் சமைக்காத அரிசி ஆகியவற்றை தண்ணீருடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை கண்ணாடி பொருட்களை ஆழமாக சுத்தம் செய்ய உதவும். முதலில் அரிசி, சோப்பு மற்றும் வினிகர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மேல்பாகம் வரைக்கும் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். இப்பொழுது கண்ணாடி பாட்டிலை ஒரு கையால் மூடிக் கொண்டு குலுக்க வேண்டும்.

அரிசியுடன் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது கண்ணாடி பொருட்களை ஆழமாக சுத்தம் செய்ய பயன்படுகிறது. பின்னர் கண்ணாடி தம்ளரை காய வைத்து துடைத்து எடுக்கலாம். அரிசி அளவில் சிறியது என்பதால் எல்லா மூலை முடுக்கெல்லாம் சென்று சுத்தம் செய்ய உதவுகிறது. கண்ணாடி பொருட்களை கையாள இதுவே ஏற்ற வழியாகும்.

Categories

Tech |