கன்னியாகுமாரியில் மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியை அடுத்த பால்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது. சண்டை நாளுக்கு நாள் முற்றவே மனமுடைந்த மனைவி கணவனைப் பிரிந்து கொத்தன்மேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் கொத்தன் மேடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுக்கவே மனவேதனையில் மாமியார் வீட்டின் முன்பே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் அருந்திய அவர் சிறிது நேரத்தில் மயங்க, அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்றைய தினம் உயிரிழக்க, இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.