சத்ருகன் சின்ஹா மீது பிரபல நடிகை புகார் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி சின்ஹாவின் தந்தை நடிகரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சத்ருகன் சின்ஹா. சோனாக்ஷி சின்கா முதலில் ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி பின் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் சோனாக்ஷி சின்காவின் தந்தை மீது நடிகை பூஜா மிஸ்ரா புகார் ஒன்றை கூறியிருப்பது தற்பொழுது வைரலாகி வருகின்றது. பூஜா மிஸ்ரா பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து மக்களிடையே பிரபல நடிகையாக உள்ளார். இவர் இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.
இந்த நிலையில் பூஜா மிஸ்ரா சத்ருகன் சின்ஹா பற்றி கூறியுள்ளதாவது, சத்ருகன் சின்ஹா எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார். என்னை மயக்கமடையச் செய்து பாலியல் தொழில் செய்திருந்தார். இவர் எனது கன்னிதன்மையை விற்பனை செய்வது தனது மகளை நடிகையாக்கியுள்ளார். எனக்கு எதிராக அவர் பில்லி சூனியமும் செய்திருந்தார். ஒரு காலகட்டத்தில் எனது தந்தையும் சத்ருகன் சின்ஹாவும் நல்ல தோழர்களாக இருந்தார்கள். எனது தந்தையிடம் சத்ருகன் சின்ஹா மனைவி பிரைன் வாஷ் செய்து என்னை சினிமா துறையில் நுழைய விடாமல் தடுத்தார். பின் என் தந்தை சென்ற 2005ஆம் வருடம் ஓய்வு பெற்ற பிறகு அவர் புனேவிற்கு சென்று விட்டார்.
ஆனால் என்னை சத்ருகன் சின்ஹாவும் அவரின் மனைவியும் மும்பையில் தொடர்ந்து தங்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். மேலும் அவர்கள் இருவரும் என்னிடம் இருந்த 35 படங்களை திருடி விட்டார்கள். மேலும் எனது பிறந்தநாளன்று எனக்கு எதையோ கொடுத்து சாப்பிட வைத்து பில்லி சூனியம் வைத்திருந்தார்கள். மேலும் அவர்களால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என பல புகார்களை முன்வைத்துள்ளார். இவர் இவ்வாறு கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.