உலகத்தில் மிகவும் அதிர்ஷ்ட சாலியான ஒருவரைப் பற்றி பார்க்கலாம். கடந்த 1929-ம் ஆண்டு பிறந்த பிரேம் சனாகா என்பவர் ஒரு மியூசிக் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 7 முறை நடந்த அதிபயங்கரமான விபத்துகளில் இருந்து உயிர் தப்பியுள்ளார். அதாவது அவர் கடந்த 1962-ம் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரேம் சனாகா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து 1963-ம் ஆண்டு அவர் விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தும் பிரேம் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அதன்பிறகு கடந்த 1963-ம் ஆண்டு பிரேம் பேருந்தில் சென்றுள்ளார்.
இந்தப் பேருந்து ஒரு மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரேம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அதன்பிறகு 1970-ம் ஆண்டு பிரேம் காரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பெட்ரோல் டேங்க் வெடித்து கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் காரில் இருந்து பிரேம் கீழே குதித்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் கார் வெடித்து முற்றிலும் சேதமானது. மேலும் 1973-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் இருந்தும் பிரேம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதேப்போன்று அடுத்தடுத்த நடந்த பல விபத்துகளிலிருந்து பிரேம் உயிர் தப்பியதால் இவரை உலகின் அதிர்ஷ்டமான மனிதன் என்று கூறுகின்றனர்.