ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா 87 வயதில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் .
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா. இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவராக பதவி வகித்தார். ஆசிரியர் தேர்வாணைய முறைகேடுகள் தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் திறந்த கல்வி வாரியம் வாயிலாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால் அவர் 10ம் வகுப்பு ஆங்கிலத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத காரணத்தினால், அவரின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வையும் தனியாக எழுதி, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் சண்டிகரில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று தனது மார்க் சீட்டை பெற்றுக் கொண்டார். இவர் பத்தாம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் 100க்கு 88 மதிப்பெண் எடுத்துள்ளார். 87 வயதில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.