Categories
பல்சுவை

33,000 அடியிலிருந்து கீழே விழுந்த பெண்…. உயிர்பிழைத்தது எப்படி…? வியக்க வைக்கும் சம்பவம்…!!!

ஒரு பெண் 33,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பியது என்றால் உங்களால் நம்ப முடியுமா? கடந்த 1972-ம் ஆண்டு ஒரு விமானத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்துள்ளனர். அந்த விமானம் வானத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வெடி குண்டு வெடித்ததால் 33,000 அடியில் இருந்து விமானம் கீழே விழுந்து 2 துண்டுகளாக சிதறியுள்ளது. இந்த விபத்தில் வெஸ்னோ வுலோவிக் என்ற பணிப்பெண் உயிர் தப்பியுள்ளார்.

அதாவது 33,000 அடியில் இருந்து விமானம் கீழே விழுந்தும் பாராசூட் கூட இல்லாமல் லெஸ்னா உயிர் தப்பியதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விபத்தில் லெஸ்னோவுக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சில ஆண்டுகள் கோமாவில் இருந்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் லெஸ்னோ கோமாவில் இருந்து மீண்டு முழுமையாக குணம் அடைந்துள்ளார். இவர் 33 ஆயிரம் அடியில் இருந்து கீழே விழுந்தும் உயிர் தப்பியதால் கின்னஸ் ‌புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்தார்.

Categories

Tech |