காணாமல் போன ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரியம்பட்டியில் தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் ஒரு விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதியில் இருந்து வெளியே சென்ற தேவிகா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து அறிந்த தேவிகாவின் பெற்றோர் அங்கு விரைந்து சென்று தங்களது மகளை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் தேவிகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.