டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராவிதமாக மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் பாலூரான்படுகை கிராமத்தில் அரசு மணல் குவாரி இயங்கி வருகின்ற நிலையில் புதுச்சேரி மாநிலத்திலுள்ள முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டேங்கர் லாரி நேற்று 6,000 லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு புதுச்சேரியில் இருந்து மணல் குவாரிக்கு வந்து கொண்டிருந்த பொழுது பூங்குடி என்ற இடத்தில் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் திடீரென லாரி மோதி அங்கிருக்கும் வயலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தால் லாரி ஓட்டுநர் செந்தில் படுகாயமடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.