திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கடைவீதியில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கடைகளில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இதையடுத்து இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பிச்சை கேட்டுள்ளார் .அப்போது கடையின் உரிமையாளர் கொடுக்க முடியாது என்றும், கை கால்கள் நன்றாக இருக்கிறது கடைக்கு வேலைக்கு வா சம்பளம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என்று கேட்டதற்கு அந்த கடைக்காரர் 400 ரூபாய் ஒரு நாளைக்கு கொடுப்பதாக கூறியுள்ளார்.
அதற்கு அந்த பிச்சை எடுக்கும் நபர் 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று பதில் கொடுத்துள்ளார். அதற்கு உரிமையாளர் இப்படி பிச்சை எடுத்தால் சம்பாதிக்கத்தான் செய்வாய் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பிச்சை எடுக்கும் நபர் பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கும் மட்டும் என்று சொல்லுங்கள். தேவையில்லாத எதுவும் பேச வேண்டாம். என்னோடு நீ வா உனக்கு தினமும் ரூ.2000 சம்பளம் தருகிறேன் என்று அந்த நபர் கூறுகிறார். கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.