மத்திய அரசு வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது மற்றும் போடுவது ஆகியவற்றில் பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஒரு நிதி ஆண்டில் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலும், அல்லது போட்டாலும் பான் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள், போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் என அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் டெபாசிட் செய்யவும் அல்லது போடவும் ஆதார், பான் கார்டு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகள், போஸ்ட் ஆபீஸ், வங்கியில் நடப்பு கணக்கு தொடங்குவதற்கு அல்லது ரொக்க கடன் வாங்குபவர்கள் கட்டாயம் மேற்கூறிய விஷயங்களின் போது போது பான் கார்டு எண்ணை அல்லது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.