Categories
மாநில செய்திகள்

1 முறை பதிவு செய்தால்…. பல முறை சேவை…. சூப்பரோ சூப்பர் அறிவிப்பு….!!!!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 134க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று மக்கள்  பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இ-சேவை திட்டம் 2.0மூலம் புதிதாக 194 சேவைகளை மேம்படுத்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள மின் ஆளுமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், இதற்கான தனியாக ஒரு செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவு செய்து அதன் மூலம் பல முறை சேவைகளை பெற முடியும் குறுந்தகவல் மூலம் சேவை விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |