Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னுடன் பிச்சை எடுக்க வரியா?…. ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பளம்…. வெளியான அதிர வைக்கும் ஆஃபர்….!!!!

திருப்பூர் கடை உரிமையாளருக்கு பிச்சைக்காரன் கொடுத்த ஆஃபர், இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்களும் தினமும் பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் நின்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது அந்த கடை உரிமையாளர், பிச்சை எடுப்பவரை  பார்த்து, கை,கால்கள் நல்லா தானே இருக்கிறது எனவும், என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதைக் கேட்ட அந்த பிச்சை எடுக்கும் நபர், சம்பளம் எவ்வளவு தருவாய் என கேட்டுள்ளார். அதற்கு அந்த கடை உரிமையாளர், நான் 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த அந்த  பிச்சை எடுக்கும் நபர், நான் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பாதிக்கிறேன் எனவும் 400 ரூபாய்க்காக நான் வேலை செய்ய வேண்டுமா என ஏளனமாக தெரிவித்துள்ளார். உடனே அந்த கடை உரிமையாளர், இப்படி ஓசில கொடுத்தால் ஏன் நீ சம்பாதிக்க மாட்டாய் என்று தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து அந்த பிச்சை எடுக்கும் நபர் கூறியதாவது, பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள், அப்படி இல்லையென்றால் இல்லை என சொல்லுங்கள் என்றும் என்னோடு நீ சேர்ந்து என் வேலையை செய்தால் உனக்கு 2000 ரூபாய் தருகிறேன் என கூறி, அந்தக் கடையிலிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த கடையில் நடந்த இந்த நிகழ்வுகள்யாவும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |