Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார் கார்டு வேணாம்…. எம்-ஆதார் கார்டு போதும்…. இது உங்களுக்கு தெரியுமா?…. எப்படி பயன்படுத்துவது….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம்.இந்த ஆதார் கார்டு இருந்தால்தான் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியும்.அப்படிப்பட்ட ஆதார் கார்டில் உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.அப்படி ஏதாவது தவறு இருந்தால் அதனை உடனடியாக அப்டேட் செய்துவிட வேண்டும்.அதற்கு ஆன்லைன் மூலமாகவே அப்டேட் செய்யும் வசதிகளும் தற்போது உள்ளது.

ஆதார் கார்டை அனைத்து இடங்களுக்கும் கையில் எடுத்துச் செல்ல முடியாது.அதனைப்போலவே ஆதார் கார்டை புகைப்படம் எடுத்து வைத்து அதை காட்டினாலும் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக எம். ஆதார் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மொபைல் ஆப். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப்ஆதார அமைப்பு சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த செயலி மூலமாக 35 வகையான சேவைகளை ஸ்மார்ட் போன் மூலமாகவே வாடிக்கையாளர்கள் பெற முடியும். உங்களின் ஆதார் கார்டு மொபைல் நம்பர் உடன் இணைத்து உள்ள அனைவருமே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள இயலும். இதில் ஒரிஜினல் ஆதார் கார்டு போலவே எம்-ஆதார் ஆப் அதிகாரப்பூர்வமான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.அடையாள சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஒரிஜினல் ஆதார் கார்டுக்கு பதிலாக இந்த டிஜிட்டல் காடை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

Categories

Tech |