விண்வெளியில் வேலைப்பார்க்கும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு வந்த பிறகு எவ்வளவு சிரமப் படுகிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா…? விண்வெளியில் இருக்கும்போது விண்வெளி வீரர்கள் பறந்து கொண்டே அனைத்து வேலைகளையும் ஜாலியாக செய்து முடுக்கிறார்கள் என நாம் நினைக்கிறோம். Tom Marsburn என்ற விண்வெளி வீரர் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்தோம் என்பதையே மறந்துவிட்டார். அதாவது இவர் தான் விண்வெளியில் இருப்பது போல நினைத்துக்கொண்டு தன் கையில் வைத்திருந்த டம்ளர் மற்றும் பேனாவை கீழே போட்டுள்ளார்.
மற்றொரு விண்வெளி வீராங்கனை மேடையில் பேசிக்கொண்டிருந்த போது அவரால் நிற்க முடியாமல் கீழே விழுகிறார். பூமியில் இருக்கும் ஈர்ப்பு விசையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அவரது உடல் பழகிவிட்டது. இது போல நிறைய கஷ்டங்களை தாண்டி விண்வெளி வீரர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.