Categories
மாநில செய்திகள்

ஊட்டி சாக்லெட்டுக்கு புவிசார் குறியீடு?…. அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?…..!!!

ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் உலகப் பிரசித்தி பெற்றது. அதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சாக்லேட்டுகள் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்-க்கு புவிசார் குறியீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இந்த பாரம்பரிய ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சுற்றுலா தலமான ஊட்டியில் சீசன் நேரத்தில் சுமார் 5 லட்சம் கிலோ வரையில் இருக்கும் இந்த சாக்லேட்டுகள் இப்போது ஏற்றுமதியும் ஆகிறது.சுமார் 200 ஆண்டுகளாக தொடரும் இந்த பாரம்பரிய தயாரிப்பை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |