தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதை நடுத்தர மக்கள் மத்தியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்டோக்களில் அடிப்படை கட்டணம் 25 ரூபாய், அடுத்தடுத்த கிலோமீட்டர்களுக்கு தலா 12 என கடந்த 2013ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதால் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் தொடர்பாக இன்று தொழிற்சங்கங்களுடனும், நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகின்றது.