பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து பார்க்கலாம். அதாவது ஏ.ஆர் ரகுமான் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய 11 வயதில் பள்ளிக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வேலைக்கு செல்வார். இதன் காரணமாக பள்ளியில் மிகவும் அசதியாகவே இருப்பார். இதனால் ஏ.ஆர் ரகுமானை எந்த ஆசிரியருக்கும் பிடிக்காது. ஒருநாள் இரவு வேலை முடிவதற்கு நீண்ட நேரம் ஆனதால் ஏ. ஆர் ரகுமான் மறுநாள் காலை பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆசிரியர் ஏ.ஆர் ரகுமானின் அம்மாவை பள்ளிக்கு வரவழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி உங்கள் பையனுக்கு பள்ளிக்கு வர தகுதியே கிடையாது என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஏ.ஆர் ரகுமான் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இருப்பினும் ஏ.ஆர் ரகுமானின் அம்மா அவருக்கு தன்னம்பிக்கையான வார்த்தைகளை கூறி ஒரு நாள் நீ வாழ்க்கையில் கட்டாயம் சாதிப்பாய் என கூறியுள்ளார். மேலும் ஏ.ஆர் ரகுமானின் விடாமுயற்சியால் தன்னுடைய 25 வயதில் இசை அமைப்பாளராக மாறினார். அதன்பிறகு பல ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர் ரகுமான் உலகமே கொண்டாடும் இடத்தில் இருக்கிறார்.